மாணவ,– மாணவிகளுக்கு இலவச பாட நூல் வழங்கும் திட்டத்தின் கீழ் 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும் பாடப்புத்தகங்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரையிலான முப்பருவமுறை புத்தகங்கள் மே 15ம் தேதிக்குள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகம் தொடங்கும்.ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு தொகுதி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு இந்த ஆண்டு முப்பருவ முறை இல்லை என்பதால் கடந்த ஆண்டு பயன்பாட்டில் இருந்த அதே புத்தகமே இந்த ஆண்டும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தலா 1 புத்தகம், 6 முதல் 9–ம் வகுப்புகளுக்கு தலா 2 புத்தகங்கள் என அச்சிடப்பட்டுள்ளன. ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்கள் கையிலும் புதிய புத்தகங்கள் இருக்கும்.10–ம் வகுப்பு பாட புத்தகங்களை 9–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். பிளஸ்–1 முடிவு வெளியான பிறகு பிளஸ்–2 புத்தகங்கள் வழங்கப்படும்.
10–ம் வகுப்பு புத்தகங்கள் வினியோகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு புத்தகங்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன.
இவை 22 வட்டார அலுவலகங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய இடங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக