தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். மீதமுள்ள இடங்களை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளாலாம்.
அந்த வகையில், 2014-15ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் 20-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 250 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம்.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் மையங்கள் அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட மையங்கள் தவிர, தபால் மற்றும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் விண்ணப்பதாரர்களின் ரேண்டம் எண் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 3-ம் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக