கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி விகித ஒப்பீட்டில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகின. அதனைத் தொடர்ந்து வழக்கம்போலவே 'இந்த ஆண்டும் மாணவிகளே மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்' என்ற செய்தியும் வெளியாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி விகித உயர்வை ஒப்பிட்டு பார்க்கும்போது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த 2014-ல் 88.0%, 2015-ல் 90.5% ஆக இருந்தது. இந்த ஆண்டு (2016-ல்) மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.3% (.8%) ஆக அதிகரித்துள்ளது. மாணவிகள் தேர்ச்சி விகிதம் கடந்த 2014-ல் 93.6%, 2015-ல் 95.4%, 2016-ல் 95.9% என உள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி விகிதம் 0.5% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 0.8% அதிகரித்துள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக