பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிப்பறைகள் போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.
குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர், வாளி, சோப், பினாயில், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை வைத்திருந்து கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து பொதுமக்களுக்கு தெரி விக்கும் வகையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு, அரசுப் பள்ளிகளில் படித்து உயர்ந்த நிலைக்கு சென்ற மாணவர்களின் விவரம், இலவச கல்வி, பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் போன்றவை குறித்து துண்டறிக்கை விநியோ கம், ஊர்வலங்கள் நடத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். பணி நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளி வளாகங்களிலிருந்து வெளியே செல்லக்கூடாது. வகுப்பறையில் ஆசிரியர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது. பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைத்து இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டு பள்ளிக்குத் தேவையான உதவி களைப் பெறலாம்.
அனைத்து மாணவர்களின் பின்புலங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பாடப்புத்தகம் தவிர்த்த அறிவுசார் பிற புத்தகங்களை ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக