லேபிள்கள்

23.5.16

பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?-தினமலர்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடைவிடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை
எழுந்துள்ளது.தமிழகத்தில், ஏப்ரல், 23 முதல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், மே, 1 முதல் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்கியது. 

விடுமுறை காலம் முடிந்து, ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் திறப்பை நீட்டிக்ககோரிக்கை எழுந்துள்ளது.

விடுமுறை இல்லை:சட்டசபை தேர்தல் நடந்ததால், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை காலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விடுமுறை காலமாக இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், மே, 21 வரை, அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விடுமுறை கிடைக்காமல் பணிகளில் ஈடுபட்டனர்.மேலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இன்னும் ஒரு வார காலம் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், ஆசிரியர்களும் விடுமுறை காலத்தை நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்கநிர்வாகிகள் கூறியதாவது:ஏப்ரல் முதல், மே, 14 வரை, ஆசிரியர்கள் அனைவரும் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், மதிப்பிடும் பணியை பார்த்தனர். பின், 21ம் தேதி வரை தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். எனவே, இந்த ஆண்டு கோடை விடுமுறை காலம் முழுவதும் பணிக்காலமாகவே மாறி விட்டது. ஆசிரியர்களும், தங்கள் மனைவி, குடும்பம், குழந்தைகளுடன் கோடை விடுமுறையை கழிக்க வேண்டும்.

ஆக்கப்பூர்வமாக...பெரும்பாலான இடங்களில், பெற்றோர் பலர் அரசியல் பணிகளில் ஈடுபட்டதாலும், அவர்களின் பிள்ளைகள் கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக கழிக்கவில்லை.மேலும், வானிலை மைய முன்னறிவிப்பின் படி, ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் அதிகம் இருக்கும் என்பதால், விடுமுறை காலத்தை நீட்டிக்க, புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக