அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப
பதிவு ஏப்ரல், 15ல் துவங்கியது. இதுவரை, 'ஆன்லைன்' மூலம், 2.38 லட்சம் பேர் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.70 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். மே, 31ம் தேதி வரை மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்தவர்கள் விண்ணப்பகட்டணத்தை செலுத்தி, ஜூன், 4ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கு விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டும். எனவே, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு, இன்னும், மூன்று நாட்களே அவகாசம் உள்ளது. அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக