தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, ஐந்து நாட்களில், 'ஆன்லைன்' மூலம்,
9,000க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து, கால்நடை பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது:
கடந்த, 20ம் தேதி முதல், www.tanuvas.ac.in என்ற, எங்கள் பல்கலை இணையதளத்தில், ஆன்லைன் மூலம் இளநிலை படிப்புகளுக்கான மனுக்களை வழங்கி வருகிறோம். இதில், 320 இடங்கள் உள்ள பி.வி.எஸ்.சி., படிப்பில் சேர்வதற்கு அதிகபட்சமாக, 6,848மாணவர் விண்ணப்பித்துள்ளனர்.தலா, 20 இடங்களை உடைய பி.டெக்., படிப்புகளை பொறுத்தவரையில், உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்; பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு முறையே, 947, 502 மற்றும், 851 மனுக்கள் வந்துள்ளன. மொத்தத்தில், ஐந்து நாட்களில், 9,148 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன், 10 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அதன்பின், மனுக்களை நேரடியாக சமர்ப்பிப்பதற்கு, ஜூன் 17, கடைசி தேதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக