அரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். கல்விக்கு பெயர் பெற்ற நெல்லையில்தான் இந்த 'அதிசயம்' நிகழ்ந்துள்ளது.
நெல்லை அரசு பள்ளியை சேர்ந்த முருகபிரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3வது இடம்
பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 500க்கு 497 ஆகும். 499 மதிப்பெண் பெற்ற 2 மாணாக்கர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்த நிலையில், 498 மதிப்பெண் பெற்ற 50 மாணாக்கர்கள் 2வது இடம் பிடித்தனர். அந்த வகையில், 497 மதிப்பெண் பெற்ற முருகபிரியா 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை என்ற குற்றச்சாட்டுடன் தனியார் பள்ளிகளில் அதிக பணம் செலவிட்டு பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, முருகபிரியாவின் சாதனை யோசனையை தூண்டியிருக்கும்.
இதுகுறித்து முருக பிரியா கூறுகையில், எனது பள்ளி தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், நன்கு பயிற்சி கொடுத்தனர். பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். எல்லோருக்கும் நன்றிதெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர் ஆக ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறினார்.தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக