கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், இரண்டு லட்சம் பேர், நுாற்றுக்கு நுாறு எடுத்ததால் அரசு தேர்வுத்துறை, வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வந்தது. அதனால், 'சென்டம்' எண்ணிக்கை, மூன்றில் ஒரு
பங்காக குறைந்துஉள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கடந்த ஆண்டு, 773 பேர், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அதேபோல், இரண்டு லட்சம் பேர், ஏதாவது ஒரு பாடத்தில் நுாற்றுக்கு நுாறு எடுத்தனர். இதனால், தேர்வு முறையிலும், மதிப்பீட்டிலும் மாற்றம் கொண்டு வர கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, தேர்வுத்துறை சார்பில் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பாடங்களின் உட்பகுதியில் இருந்து கேள்வி கள் இடம்பெற்றன. அதேபோல், விடை திருத்தத்தில் சென்டம் வழங்க, ஆசிரியர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன் விளைவாக, மாநில ரேங்க் பெற்றவர்கள் எண்ணிக்கையும்,சென்டம் எண்ணிக்கையும், மூன்றில் ஒரு பங்காக குறைந்து உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக