லேபிள்கள்

28.5.16

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை:


 புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலின் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் துவங்கும் நாள் ஜூன் 6-ம் தேதி (திங்கள்கிழமை) ஆக மாற்றி அறிவிக்கப்படுகிறது.

மேலும் இடைப்பட்ட இவ்விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என குமார் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக