மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் (வயது 47) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆனார்.1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம்ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார் பெஞ்சமின்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தற்போது வரை சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவிவகித்து வருகிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக