லேபிள்கள்

24.5.16

மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்- தமிழகத்துக்கு விலக்கு

டெல்லி: மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கான அவசரசட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிகையெழுத்திட்டுள்ளார். இதில் தமிழகம், மகாராஷ்டிராஉள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில்
மருத்துவபடிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டமருத்துவப் படிப்புகளுக்குநாடு முழுவதும்பொது
நுழைவுத்தேர்வுநடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு தமிழகம், மகாராஷ்டிரம்உட்பட 15-க்கும்மேற்பட்டமாநிலங்கள்கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகிடையாது. பிளஸ்2மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர்சேர்க்கைநடைபெறுகிறது. மகாராஷ்டிரம் உள்ளிட்டமாநிலங்களில் அந்தந்தஅரசுகள்சார்பில்நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக அனைத்து மாநிலஅமைச்சர்களுடன் மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாடெல்லியில்அண்மையில் ஆலோசனை நடத்தினார்.அப்போதுசிபிஎஸ்இ பாடத்துக்கும்மாநிலபாடத்திட்டத்துக்கும்ஏராளமான வேறுபாடுகள்உள்ளன.சிபிஎஸ்இபாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள்பாதிக்கப்படுவார்கள் என்று மாநில அமைச்சர்கள்தெரிவித்தனர். இதையடுத்து நடப்பாண்டில் மட்டும் பொதுநுழைவுத்தேர்வில்இருந்து மாநிலங்களுக்குவிலக்குஅளிக்கமுடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அவசரசட்டத்துக்கும் மத்திய அமைச்சரவைகடந்தவெள்ளிக்கிழமைஒப்புதல் வழங்கியது. இருப்பினும் இந்தஅவசர சட்டத்தில் ஜனாதிபதிபிரணாப் முகர்ஜிஉடனேகையெழுத்திடவில்லை. இந்த சட்டம்குறித்துமத்தியஅரசிடம் கூடுதல்விளக்கங்களை அவர்கோரியிருந்தார். இதனால் அமைச்சர்நட்டாஜனாதிபதியைசந்தித்து விளக்கங்களைஅளித்திருந்தார்.இந்நிலையில் இன்று பொதுநுழைவுத் தேர்வுக்கானஅவசரசட்டத்தில்ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிகையெழுத்திட்டுள்ளார். இந்த அவசரசட்டத்தில் தமிழகம்,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குஓராண்டுவிலக்குஅளிக்கப்பட்டுள்ளது. இதனால்தமிழகத்தில்நடப்பாண்டில் நுழைவுத் தேர்வு முறையில்இல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண்அடிப்படையிலேயேகலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவமாணவர்சேர்க்கைநடைபெறும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக