லேபிள்கள்

23.5.16

மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும் 'ரேங்க்' பட்டியல் வெளியிட முடிவு

அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது.மேலாண்மை,
பொறியியல், மருந்தியல் ஆகிய கல்லுாரிகளுக்கு மட்டும், தேசிய அளவில், ரேங்க் எனப்படும் தரவரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கு இந்த பட்டியல் வெளியிடப் படுவதில்லை.

இந்நிலையில், உயர் கல்வித் துறைக்கான செயலர் வி.எஸ்.ஓபராய் மற்றும் உயர் அதிகாரிகளுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அளவுகோல்களை நிர்ணயிப்பது குறித்து, தேசிய சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரிடமும், எய்ம்ஸ் மருத்துவ மனை இயக்குனரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக