பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள் வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது.
சுமார் 15 நாட்களுக்குள் இந்தப் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
ஆனால், கடந்தாண்டு போன்றே மே 10ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.
26-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
what time the tamilnadu 12th result 2014 publish ???
பதிலளிநீக்கு