''பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை,
முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறுகையில், ''குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால், சரியான விடை வருகிறது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே, அந்த கேள்வியை, 'அட்டன்' செய்திருந்தால், அதற்குரிய மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல், 15க்குள், இந்த பணி முடிந்தால், அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும், 15 நாள் ஆகும். எனவே, கடந்த ஆண்டைப்போல், மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு, மே, 9ல், தேர்வு முடிவு ?வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு ?வளியாகவும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக