6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழு 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் தனிநபர் ஊதியக் குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்துக் கொள்ளலாம். புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தகுந்த விதிமுறைகளை இந்தக் குழுவுக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை பெற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இந்தக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்தக் குழு ஆய்வு செய்து புதிய ஊதிய விகித்தை நியமிக்கும் வரை கடந்த 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடமுறைப்படுத்தக் கூடாது. அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய அளவு குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து நேற்று தலைமைச்செயலக வட்டாரத்தில் அரசானை நிலை குறித்து அறிய விசாரித்த வகையில்
1. அரசானை ஏது இதுநாள் வரை வெளியிடப்படவில்லை என அறியலாகிறது
2. தேர்தல் விதிகள்நடை முறையின் காரணமாக அரசாணை வெளியிட வாய்ப்பில்லை
3.இது நாள் வரை குழு அமைக்க,அரசாணை வெளியிட பூர்வாங்க பணிகள் ( தீர்ப்பில் கூறப்பட்டதைப்போன்று 3 வாரகாலங்கள் முடிந்தமையால்) ஏதும் தொடங்கப்படவில்லை என்பதால்
அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்களின் படி சந்தேகிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக