உயிரியல், தாவரவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்ததால் 200–க்கு 200 மதிப்பெண் பெற முடியாது என்று பிளஸ்–2 மாணவர்கள் புலம்பினார்கள்.
அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இந்த நிலையில் உயிரி யல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் ஆகிய பாடங் களுக்கான தேர்வு நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 117 பேரும், தனித்தேர்வர்கள் 81 பேரும் என்று மொத்தம் 198 பேர் வரவில்லை.
நேற்று நடைபெற்ற தேர்வில் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் தேர்வு அமைதி யான முறையில் நடைபெற்று முடிந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி கூறினார்.
கடினமான கேள்விகள்
தேர்வு குறித்து மாணவர்களிடம் கேட்டபோது அவர் கள் கூறியதாவது:–
உயிரியல் மற்றும் தாவரவி யல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. 2,5 மதிப்பெண் கேள்விகள் பதில் எழுத முடி யாதவாறு இருந்தது. உயிரியல் மற்றும் தாவரவியல் பாடத்தில் 200–க்கு 200 மதிப்பெண் வாங்குவது என்பது இந்த ஆண்டு மிகவும் கடினமான ஒன்று தான்.
அதேசமயம் வரலாறு மற் றும் வணிக கணிதம் தேர்வு களுக்கான வினாக்கள் சுலப மாக இருந்தது என்று தெரி வித்தனர்.
விலங்கியல் பாட கேள்விகள்
இது குறித்து உயிரியல் மற்றும் தாவரவியல் பாட ஆசிரியர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதா வது:–
இந்த ஆண்டு உயிரியல் மற் றும் தாவரவியல் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந் தது என்பது உண்மைதான். உயிரியல் தேர்வில் உயிரியல் பாடத்திலிருந்து 100 மதிப் பெண்களுக்கும், விலங்கியல் பாடத்திலிருந்து 100 மதிப் பெண்களுக்கும் என்று மொத் தம் 200 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந் தது.
இதில் விலங்கியல் பாடத் தில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் கடினமாகவே இருந்தது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாண வர்கள் தான் மருத்துவ கல் லூரிக்கு செல்ல முடியும். பெரும்பாலான மாணவர் களின் கருத்துப்படி இந்த தேர்வுகள் 2–ம் கடினம் என்ப தால் 200–க்கு 200 மதிப்பெண் பெறுவது மாணவர்களுக்கு சவாலாகவே இருக்கும்.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக