லேபிள்கள்

19.3.14

மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

அஞ்சுகிராமம் அருகே இரவிபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆடலின் கிளாடிஸ்.
நேற்று முன்தினம் பள்ளியில் 10–ம் வகுப்பு கணித பாட திருப்புதல் தேர்வு நடந்தது. தேர்வுக்கு முன்பு மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அங்கு தலைமை ஆசிரியை ஆடலின் கிளாடிஸ் சென்று பார்வையிட்டார்.
அப்போது ஒரு மாணவர் மட்டும் கணித பாடத்துக்கு பதில் அறிவியல் பாடம் படித்துக்கொண்டிருந்தார். இன்று என்ன தேர்வு என்று தெரியாமலேயே அறிவியல் பாடத்தை படித்துக்கொண்டிருப்பதாக கூறி அந்த மாணவரை ஆடலின் கிளாடிஸ் கண்டித்துள்ளார். அதற்கு அந்த மாணவர் நான் கணித பாடம் படித்து விட்டேன். அறிவியல் பாடம் கடினமாக இருப்பதால் அதை படித்துக்கொண்டிருப்பதாக கூறி உள்ளார். அதன்பிறகும் அந்த மாணவரை கண்டித்து தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த அந்த மாணவரின் பெற்றோரும், உறவினர்கள் பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்கப்பட்ட மாணவருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனிடமும் புகார் செய்யப்பட்டது. புகார் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை ஆடலின் கிளாடிசை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக