தற்போது மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் ஆன்லைன் மூலம் உரிய வலைதளத்தில் (Part-I, Part-II) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் Part-I விவரங்களை மட்டுமே கடந்த வாரம் வரை பார்க்க முடிந்தது. தற்போது Part-II விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ளும் விதமாக வலைதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. (உ.தொ.க.அலுவலர் அல்லது EMIS குழுப் பணியாளர்கள் மட்டுமே Username, Password பயன்படுத்திப் பார்க்க முடியும்)
பயப்படத் தேவையில்லை:
Part 1 மற்றும் 2ல் உள்ள விவரங்களில் ஏதேனும் தவறாகப் பதியப்பட்டிருந்தால் பதற்றப்பட வேண்டியதில்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் எந்தப் பதிவை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி வர உள்ளது என்றும் ஆன்லைன் பக்கத்திலுள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டே ஆசிரியர்களுக்கு தனித்துவ அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை, வருடாந்திர நிதி ஒதுக்கீடு, காலியாகும் இடங்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்தல், ஆசிரியர் நலம் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் விரைவில் ஒவ்வொரு AEEOவுக்கும் ஆசிரியர்களின் e-Service Register முழுமையாகப் பராமரிக்கப் பயிற்சியும் தனித்தனி User Name, Passwordம் வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக