லேபிள்கள்

17.3.14

2342 பணியிடங்களுக்கான விஏஓ தேர்வு அறிவிப்பு"; ஜூன் 14ம் தேதி நடக்கிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி
பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 15ம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். எழுத்து தேர்வு ஜூன் 14ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வு கட்டணம் ரூ.125 (விண்ணப்ப கட்டணம் ரூ.50, தேர்வு கட்டணம் ரூ.75).

தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவ கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் இணையவழி மூலமாக மட்டுமே, தேர்வாணையம் இணையதள முகவரியான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net  விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக