லேபிள்கள்

22.3.14

ஆசிரியர் பட்டயப் படிப்பு: ஏப். 2 முதல் 10 வரை செய்முறைத் தேர்வு

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 400-க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்துவதற்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.
இவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக