லேபிள்கள்

30.3.14

நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வரும் 31ம் தேதி தேர்தல் பயிற்சி

"நாமக்கல் மாவட்டத்தில், வரும், 31ம் தேதி, 1,475 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி தலைமையிடத்தில் பயிற்சி நடக்கிறது' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று (29ம் தேதி) துவங்க உள்ள நிலையில், ஏப்ரல், 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்ததுபோல், தேர்தல் பிரிவில் பணியாற்றும் அலுவலர்களும், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,475 ஓட்டுச்சாவடிகளில், 6,34,267 ஆண், 6,47,346 பெண், 44, திருநங்கை, என, 12,81,657 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக, பாதை வசதி, ஜன்னல், மின்வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு போலீஸ் தரப்பில், பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ள அரசு அலுவலர், ஆசிரியர், போலீஸார், மாஜி சீருடை பணியாளர், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்தவர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அதற்கிடையே, ஓட்டுச்சாவடியில் பணியாற்றக் கூடிய அலுவலர்கள் அடையாளங் காணப்பட்டு, அவர்களுக்கான தேர்தல் பயிற்சி துவங்கப்படவுள்ளது. வரும், 31 தேதி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தலைமையிடத்தில், தேர்தலில் பணியாற்றும் முதன்மை அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், நிலை 1, 2, 3, ஆயிரம் வாக்காளர் எண்ணிக்கைக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடியில், கூடுதலாக ஒரு தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக, தேர்தல் நேரம், காலை ஒரு மணி நேரம் கூடுதலாகவும், மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக்கப்பட்டதால், தேர்தல் பணியாற்றும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்படும்.
"தேர்தலில் பங்கேற்கும் அனைத்து பிரிவு அலுவலருக்கும், அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையிடத்தில் பயிற்சி வழங்கப்படும். அவர்கள், தேர்தலுக்கு முந்தைய நாள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று பணியாற்றுவர்' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக