மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியிலும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய தேர்வாக பிளஸ் 2 பொதுத்தேர்வு கருதப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கியது ஏப்ரல் 9-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களைச் சேர்த்து ஏறத்தாழ 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். இத்தேர்வின் முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக