லேபிள்கள்

5.4.14

எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் எப்போது?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 2-ஆவது வாரத்தில் விண்ணப்பம் விநியோகிக்கப்படவுள்ளதாக மருத்துவக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்படும். அதை தொடர்ந்து மே 11-ஆம் தேதிக்கு மேல் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும்.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, மாநில ஒதுக்கீட்டுக்கு என 2,172 இடங்கள் உள்ளன.
இந்த இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தமிழகத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 980-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பத்தைத் தான் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
விண்ணப்ப விநியோக தேதி, விóண்ணப்ப கட்டணம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக