பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போது குழப்பம் இல்லாமல் மதிப்பெண் வழங்கும் வகையில், துல்லியமான கீஆன்சரை தேர்வுத்துறை தயாரித்துள்ளது. இதை வைத்துத்தான் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 21ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்கள் தவிர மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக அனைத்து பாட கேள்விகளுக்கான விடைகளை, துல்லியமாக தயாரிக்க அந்தந்த பாடத்தில் சிறந்த ஆசிரியர்கள் தலா 4 பேர் வீதம் தேர்வு செய்து அவர்களிடம் உரிய பாடங்களுக்கு விடைகள் தயாரித்து தேர்வுத்துறை வாங்கியுள்ளது.
ஒவ்வொருவரும் தயாரித்து கொடுத்த விடைதாளில், ஒரே மாதிரியாக விடைகள் உள்ள கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு இறுதியாக கீஆன்சர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கீஆன்சரே இறுதியானது. இதை வைத்துத்தான் அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுக்கு பிறகு மறு கூட்டல் மற்றும் மறு திருத்தம் செய்ய அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் மிகச் சரியாக விடைத் தாளை திருத்தி முடிக்கவே மேற்கண்ட ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது. அதனால் இந்த ஆண்டு மறு கூட்டல் செய்ய கேட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பிழை செய்தால் அவர்கள் மீது இந்த ஆண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக