எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் 2–ம் தாள் வினாக்களும் எளிமையாக இருந்தன என்று மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 26–ந்தேதி தொடங்கிய தேர்வில் தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிந்துள்ளது. நேற்று ஆங்கிலம் 2–ம் தாளுக்கான தேர்வு நடைபெற்றது.
முதல் தாள் வினாக்களை போலவே இந்த தேர்விலும் எளிமையாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. உரையாடல் பகுதி, செய்தியை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் தயாரித்தல் ஆகியவை அடிக்கடிகேட்ட கேள்விகள் என்பதால் பயிற்சி பெற்றதாக இருந்தன. புத்தகம் பற்றி ‘பாரா’ கேட்கப்பட்டிருந்தது.
இவை அனைத்தும் அடிக்கடி கேட்கப்பட்டு பயிற்சி பெற்றவையாக இருந்ததால் விடை எழுதுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. பக்ரீத் திருநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து கடிதம் எழுதும் வினா, ஒரு மதிப்பெண் பகுதி எளிதாக இருந்தது. படம் பார்த்து விளக்கம் அளிக்கும் பகுதியில் தேசிய விலங்கான புலியை பற்றி கேட்கப்பட்டிருந்தது.
அதிக மதிப்பெண்
கதை பகுதி முதல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்ததால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விடையளித்தனர். சாதாரணமாக படிக்கக் கூடியவர்களும் 50க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. நன்றாக படிக்க கூடிய மாணவ, மாணவிகள் 95க்கும் மேல் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து ராஜேஸ்வரி, ஆங்கில ஆசிரியை செந்தில்மேகலா ஆகியோர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக