எல்கேஜி பாடப்புத்தகத்தில் எஸ் என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்க வரையப்பட்டுள்ள கண்ணாடி அணிந்த சூரியன் படத்தை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்கேஜி பாடப்புத்தகத்தில் உதய சூரியன் படம், கட்சியினை நினைவு கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றும், அதனை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 7ம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தொடக்கக் கல்வித் துறை இயக்குநருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக