லேபிள்கள்

2.4.14

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரவுள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக