பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதி கடினமாக அமைந்ததால், கிராமப்புற மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பது கடினம்,' என, மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
* டி.பாபு, வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்: 'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'ஜெயித்துகாட்டுவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆசிரியர் கொடுத்த டிப்ஸ், 100 மார்க் இலக்கை தொடுவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. எளிமையாக இருந்ததால்,தேர்வு முடிய 10 நிமிடங்களுக்கு முன் எழுதி முடித்துவிட்டேன். எதிர்பார்த்த கேள்விகள் வராமல் போனாலும், அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்திருந்ததால், 'சென்டம்' எடுக்க வாய்ப்பு உள்ளது, என்றார்.
* எம்.நஷ்மிரா ஆஸ்மி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஆனால், வழக்கம் போல் ஐந்து மார்க் வினாவில், காரணி படுத்துதல் அல்லது வர்க்கமூலம் ஆகிய பிரிவுகளில் இருந்து ஏதாவது ஒரு வினா, கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்த இரண்டு பிரிவுகளில் இருந்தும், ஐந்து மார்க் வினா கேட்கப்படவில்லை. சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு மார்க் வினாக்கள் எளிதாக இருந்தன. இரண்டு மார்க் பிரிவில், 22 வது வினா புத்தகத்தில் இல்லை. இதே பிரிவில், 30 வது வினா 'மாடல்' புத்தகத்தில் உள்ளது. ஆனால், அதில் கொடுக்கப்பட்ட எண்கள் மாறுபட்டுள்ளது.
* சி.தென்கரை முத்துப்பிள்ளை, தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி வேடர்புளியங்குளம், மதுரை: வினாத்தாள், 'புளு பிரிண்ட்' அடிப்படையில் அமைந்திருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், 15 வினாக்களும், பாடத்தின் பின் பகுதியில், கேட்கப்பட்டதால், எளிதாக இருந்தன. இரண்டு மதிப்பெண் பகுதியில், 22வது வினா 'கிரியேட்டிவ்' ஆக அமைந்துள்ளது. ஐந்து மதிப்பெண் பகுதியில், கட்டாய வினாவும் 'கிரியேட்டிவ்' ஆக அமைந்துள்ளது. இது, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். 45 வது வினா, கட்டாய வினா. இது, இயற்கணிதம், தொடர்முறைகள் பாடத்தில் இருந்து யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தது. 41வது வினாவும் நேரடியாக கேட்காமல், அமைந்ததால் மாணவர்கள் திணறினர். நகர்ப்புற மாணவர்களுக்கு பிரச்னை இல்லை. எளிதில் தேர்ச்சி பெறலாம். கிராமப்புற மாணவர்கள், 'சென்டம்' பெறுவது கஷ்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக