லேபிள்கள்

1.4.14

பிளஸ் 2 தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி: 66 மையங்களுக்கும் விரிவாக்கம்

கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2, தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள், ஒரு சில மையங்களில் மட்டும் திருத்தப்பட்டன. இந்த ஆண்டு, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், வரவேற்பு தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலர், ஜனார்த்தனன் வெளியிட்ட அறிவிப்பு: ஒரு சில மையங்களில் மட்டும், தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பிட்ட மையங்களுக்கு, ஆசிரியர்கள் செல்லும் நிலை இருந்தது. மற்ற பாடங்களைப் போல், தொழிற்கல்வி பாட விடைத்தாள்களை, அனைத்து மையங்களிலும் திருத்த வேண்டும் எ ன, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். முதல்முறையாக, இந்த ஆண்டு, கணக்குப் பதிவியல், தணிக்கையியல், அலுவலக மேலாண்மை, வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய விடைத்தாள்களை, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. விவசாயம், பொறியியல், சுகாதாரம், தட்டச்சு போன்ற பாட தேர்வுகள், இரு மையங்களில் மட்டும் திருத்தப்பட்டு வந்தன. தற்போது, எட்டு மையங்களாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
பல ஆண்டு கோரிக்கையை, இந்த ஆண்டு நிறைவேற்றிய தேர்வுத் துறையின் செயலை வரவேற்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறி உள்ளார். தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, கடந்த மாதம் 3ல் துவங்கி, 25ல் முடிவடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக